சென்னை: தடை செய்யப்பட்ட பகுதிகளில் பறந்த ட்ரோன்.. கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு..!

ட்ரோன், ஆளில்லா விமானங்களை பறக்க விட்டால் கடும் நடவடிக்கை பாயும் - காவல்துறை..!

சென்னை: தடை செய்யப்பட்ட பகுதிகளில் பறந்த ட்ரோன்.. கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு..!

ஆளில்லா ட்ரோன்:

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு மேலே இன்று மதியம் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், எஸ்பிளணேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கர்நாடக இளைஞர் கைது:

இதனையடுத்து உயர்நீதிமன்றம் சுற்றி போலீசார் சோதனை செய்த போது இளைஞர் ஒருவர் ஆளில்லா விமானத்தை பறக்க விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது, அந்த இளைஞர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சார்லஸ் என்பதும் தனது உறவினர் திருமணத்திற்காக பெரம்பூருக்கு ட்ரோன் கேமராவை எடுத்து வந்ததாகவும், திருமணம் முடிந்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களை படம் பிடிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ட்ரோன் பறிமுதல்:

மேலும் அவரது ட்ரோன் கேமரா உள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரிசர்வ் வங்கி, உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகத்தில் ஒரு பகுதி என பல முக்கிய தடை செய்யப்பட்ட இடங்களின் காட்சிகள் இருந்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ட்ரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது.

காவல்துறை எச்சரிக்கை:

சென்னையில் தடை செய்யப்பட்ட இடங்களில் ட்ரோன் விடுவது மற்றும் ஆளில்லா விமானம் பறக்க விடுவது கண்டறிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை சார்பாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.