சென்னை: மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. அமைச்சர் தலைமையில் நடந்த திருமணம்..!

மனநல சிகிச்சை பெற்று குணமடைந்த ஜோடி.. மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம்..!

சென்னை: மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. அமைச்சர் தலைமையில் நடந்த திருமணம்..!

மனநல சிகிச்சை பெற்று வந்த இருவர்:

தந்தையை இழந்த சோகத்தில் கடும் மனஉளைச்சலால் அனுமதிக்கப்பட்ட தீபா என்பவரும் affective disorder-ஆல் பாதிக்கப்பட்ட மகேந்திரன் என்பவரும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வந்தனர்.

குணமடைந்தவர்களுக்கு இடையே காதல்: 

இருவரும் குணமடைந்த பின் அங்கேயே பணிபுரிந்து வந்த நிலையில், நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து பெரியோர்களால் நிச்சயமும் செய்யப்பட்டது. 

அமைச்சர் தலைமையில் திருமணம்:

இது குறித்து அறிந்த குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது தலைமையில் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்ததுடன் ஆசிர்வாதமும் செய்தார். 

சூப்பர் வைசர் பணி ஆணை பரிசு:

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலேயே நடைபெற்ற இந்த திருமணத்தின் போது, இருவருக்கும் திருமணப் பரிசாக வார்டு சூப்பர் வைசர் பணிக்கான பணி ஆணை வழங்கப்பட்டது.