கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக புகார்... பெற்றோர் போராட்டம்...

மாணவர்களை ஆசிரியர் ஒருவர், பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய சொன்னதாக புகார் எழுந்ததை அடுத்து, பள்ளியை மூடி மாணவர்களின் பெற்றொர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக புகார்... பெற்றோர் போராட்டம்...

தூத்துக்குடி | கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. 33 மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு பயிலும் பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகவும், ஆசிரியர்கள் கழிவறையை பயன்படுத்த மாணவர்களை தண்ணீர் எடுத்து வர சொல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | கருப்புக் கொடி வீடுகளில் ஏற்றி ஆர்ப்பாட்டம்...

மேலும் மாணவர்களை அவதூறான வார்த்தைகளால் திட்டி வருவதாகவும், பாடம் நடத்தாமல் ஆசிரியர்கள் செல்போனில் கேம் விளையாடி வருவதாகவும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பள்ளியை பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஆசிரியர்களை பள்ளிக்குள் விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கக் கல்வி) சின்னராசு, வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | தஞ்சை - பொங்கல் பானையில் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்..!