தொடரும் வெறி நாய் தாக்குதல்கள் - 106 பேர் சிகிச்சை...
போடி சுற்றுவட்டாரப் பகுதிகளில், சுற்றித் திரியும் வெறிநாய்கள் கடித்ததில், ஒரு மாதத்தில் 106 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி | போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் வெறி பிடித்தல் அல்லது ரெபீஸ் நோய் பாதிப்புடன் சாலைகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன.
இந்த நாய்கள் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சுற்றி வளைத்து கடித்து காயப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 106 பேர் வெறிநாய் கடியுடன், போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெருக்களில் போடப்படும் உணவு கழிவுகள், இறைச்சி கழிவுகள் முறையாக அகற்றப்படாததால், நாய்கள் சுற்றித் திரிவதாக புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் ரெபீஸ் நோய் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | தண்ணீர் பாய்ச்ச சென்ற மூதாட்டி வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்...