கடலூர்: நா பணம் எடுத்து தரேன்.. ஏடிஎம் வாசலில் மோசடி செய்த நபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

மோசடி ஆசாமியிடமிருந்து 18 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்..!

கடலூர்: நா பணம் எடுத்து தரேன்.. ஏடிஎம் வாசலில் மோசடி செய்த நபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

ஏடிஎம்-ல் மோசடி:

நெய்வேலி அருகே பாண்டியன் என்பவர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் தான் பணத்தை எடுத்து தருகிறேன் என்று கூறி அவரின் ஏடிஎம் கார்டை வாங்கி வேறு ஒரு கார்டை கொடுத்துள்ளார்.

மோசடி நபரை பிடித்த பொதுமக்கள்:

சந்தேகமடைந்த அவர் கூச்சலிட அங்கு இருந்தவர்கள் மர்ம நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்கள், பெண்களிடம் ஏடிஎம் கார்டு மாற்றி கொடுத்து பணத்தை திருடியது தெரியவந்தது. 

13 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்:

இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 13 ஏடிஎம் கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.