சேதமடைந்த உயர்மட்ட பாலத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்...

மேட்டுப்பாளையம் அருகே உயர்மட்ட பாலம் தடுப்பு சுவர் இடிந்து வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சேதமடைந்த உயர்மட்ட பாலத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்...

கோவை | மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை பகத்தூர் பகுதியில் சுமார் 20 அடி உயரம் கொண்ட உயர் மட்ட பாலம் உள்ளது. சிறுமுகை புளியம்பட்டி இனைப்பு சாலையாக உள்ள பகுதியில் ஏழு எருமை பள்ளத்தின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டது.

பகத்தூர், புங்கம்பாளையம், இடுகம்பாளையம், இலுப்பநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இந்த பாலத்தை கடந்தே மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளுக்கு வர முடியும். இந்த நிலையில் இந்த பாலம் சில மாதங்களுக்கு முன் இருந்து சிதைவடைந்து வந்த நிலையில் தற்போது பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர் முழுவதும் பெயர்ந்து இடிந்து விழுந்துள்ளது.

மேலும் படிக்க | சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் - ன் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்...!

இதனால் அந்த பாலத்தை கடந்து செல்லும் வாகண ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பாலத்தை கடப்பது டன் தடுப்பு சுவர் இல்லாமல் இருப்பதால் இரவு நேரங்களில் பாலத்தில் இருந்து தவறி தண்ணீர் விழும் நிலை ஏற்படுகிறது இரவு நேரங்களில் மது போதையுடன் வரும் சிலர் இதில் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் பாலத்தின் உறுதி தன்மையும் பலம் இழந்து கனரக வாகனங்கள் செல்லும் போது பாலமே அசையும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்களின் உயிர் பலி ஏற்படும் முன்பு இந்த பாலத்தை மாவட்ட நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்

மேலும் படிக்க | ராமர் சேது பாலம் : அறிவியல் உண்மைகள், வரலாறு மற்றும் புராண முக்கியத்துவம்!!!