தருமபுரி : புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை..! லட்சக்கணக்கில் விற்பனையான காய்கறிகள்...!

தருமபுரி உழவர் சந்தையில் இன்று புரட்டாசி சனிக்கிழமையை காய்கறிகள் விற்பனை அமோகம்

தருமபுரி : புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை..! லட்சக்கணக்கில் விற்பனையான காய்கறிகள்...!

தருமபுரி உழவர் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 30 டன் அளவிற்கு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாதங்களில் மக்கள் இறைச்சி உண்ணாமல் விரதம் இருந்து வருகின்றனர். இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விரதம் என்பதால், தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். 

இதனால் உழவர் சந்தையில், கடந்த வாரத்தை விட காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து விற்பனையானது. இதில் தக்காளி ரூ.28, கத்திரிக்காய் ரூ.30, வெண்டை ரூ.20, முள்ளங்கி ரூ.16, கொத்தவரை ரூ.34, முருங்கை ரூ.60, பச்சை மிளகாய் ரூ.40 என விற்பனயானது. இன்று மட்டும் 140 விவசாயிகள் கடை அமைத்து இருந்தனர். மேலும், காய்கறிகளை வாங்க 9409 நுகர்வோர் வருகை புரிந்தனர். அதனுடன் பழங்கள், காய்கறிகள் என மொத்தம் 37 டன் எடையுள்ள காய்கறிகள் 13.42 இலட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, பொதுமககள் வருகை அதிகரித்தது. இதனால் கிருஷ்ணகிரி - தருமபுரி சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.