பழுதான படகு.... திசை மாறிய மீனவர்கள்... மீட்கப் புறப்பட்ட இந்திய கடற்படை மற்றும் சக மீனவர்கள்!

பழுதான படகு.... திசை மாறிய மீனவர்கள்... மீட்கப் புறப்பட்ட இந்திய கடற்படை மற்றும் சக மீனவர்கள்!

பழுதானப் படகு.... திசை மாறிய மீனவர்கள்... மீட்கப் புறப்பட்ட இந்திய கடற்படை மற்றும் சக மீனவர்கள்!

கடலில் சிக்கிய பதினாறு மீனவர்கள்

சீர்காழி அருகே மயிலாடுதுறை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 25-ஆம் தேதி ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகின் மூலம் அதே ஊரை சேர்ந்த சந்திரகுமார், அஞ்சப்பன், தமிழ்செல்வன் உட்பட பதினாறு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். எதிர்பாராத விதமாக படகில் பழுது ஏற்பட்ட நிலையில் பதினாறு மீனவர்களும் கடலில் சிக்கியுள்ளனர்.

தப்பி வந்த நாலு மீனவர்கள்

நேற்று முன்தினம் கொடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பழுதடைந்துள்ளது. இந்நிலையில் அந்த படகிலிருந்து மற்றொரு படகு மூலம் தப்பி வந்த நாலு மீனவர்களின் தகவலின் படி பூம்புகார் கடற்கரை காவல் நிலையப் போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திசை மாறியப் படகு

இச்சம்பவம் குறித்து மாவட்ட கடற்சார் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு போலிசார் அளித்த தகவலின் பேரில் கடலோரக் காவல் படையினர் பழுதடைந்தப் படகு மற்றும் மீனவர்களை தேடி சென்றுள்ளனர். காற்றின் வேகத்தில் திசை மாறிய விசைப் படகு சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றுள்ளது. இதனையடுத்து சர்வதேச எல்லைக்குள் இலங்கை அருகில் படகு இருப்பதை இந்திய கடற் படை உறுதி செய்துள்ளது.

மேலும் அரிய: மீனவர் விவகாரம்! வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

பூம்புகார் மீனவர்கள் மீட்பு

இயந்திரக் கோளாறின் காரணமாக எல்லைத் தாண்டி வந்த படகையும், மீனவர்களையும் மீட்டு செல்ல இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகக் கடலோர அமலாக்கப் பிரிவு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் பூம்புகார் மீனவர்கள் எட்டுப் பேர் விசைப்படகில் சர்வதேச எல்லைக்கு புறப்பட்டனர். இதனால் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.