எல்லாம் ஒரு விளம்பரம் தான்.. காதல் ஜோடியின் புதிய உத்தி..!

எல்லாம் ஒரு விளம்பரம் தான்.. காதல் ஜோடியின் புதிய உத்தி..!

காதல் மலர்ந்தது

பெரியார் வகுத்த கொள்கைகளில் ஒன்றான சுயமரியாதை திருமணத்தை செய்தால் தமிழ்நாடு முழுவதும் பிரபலமடைந்து விடுவோம் என்ற ஆசையில் வந்து கடைசியில் அவஸ்தையோடு திரும்பி சென்றவர்கள்தான் இவர்கள்.  

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவரும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் கல்லூரியில் படிக்கும் போதே காதல் மலர்ந்தது. வசந்தகுமார் ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்ததைத் தொடர்ந்து தன் காதலியை திருமணம் செய்யும் ஆசையில் இறங்கினார். 

பெற்றோர் எதிர்ப்பு 

இவர்களின் காதலுக்கு பெற்றோரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சாதி வேண்டாம், சடங்கு வேண்டாம், மதம் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் என வீறுகொண்டு எழுந்த காதல் புறாக்கள் வீட்டை விட்டு வெளியேறியது.

சுயமரியாதை இணையேற்பு 

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலையின் முன்பு சுயமரியாதை திருமணம் செய்து கொள்வதாய் விருப்பம் கொண்டதையடுத்து பெரியார் ஆதரவாளர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

பத்திரிக்கையாளர் கேள்வி

ஆனால் இந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை இந்த ஜோடிக்கு. சுயமரியாதை திருமணம் குறித்து அறிந்த பத்திரிக்கையாளர்கள் இதுகுறித்து கேட்டபோது மணமக்கள் மாற்றி மாற்றிப் பேசி குழப்பியடித்தனர். அப்போது கவுசல்யாவின் கழுத்தில் தாலியைக் கவனித்த பத்திரிக்கையாளர், அதென்ன தாலி என கேட்டார். 

உடனே தாலியை மறைத்துக் கொண்ட கவுசல்யா என்ன சொல்வதென்றே தெரியாமல் பேந்த பேந்த முழிக்க, ரகளைகள் ஆரம்பமானது. ஒரு வேளை வேறு ஒருவரின் மனைவியை கடத்தி வந்துதான் சுயமரியாதை திருமணம் செய்கிறாரோ என்ற சந்தேகத்தில் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

தாலி வந்த கதை

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கவுசல்யா, தன் காதலன் வசந்தகுமார் கட்டிய தாலிதான் இதுவென கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். காலையிலேயே கொண்டலாம்பட்டி கரபுரநாதர் சிவபெருமான் கோயிலில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த பிறகு பெரியாரின் முன்பு சுயமரியாதையும் செய்து கொண்ட சம்பவத்தால் பெரியார் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். 

ஏற்கெனவே தாலியைக் கட்டிக் கொண்டு வெறும் விளம்பரத்துக்காகத்தான் சுயமரியாதை திருமணம் செய்ய வந்தீர்களா? என அங்கிருந்தவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்க கவுசல்யாவுக்கு தரதரவென கண்ணீர் கொப்பளித்தது. பின்னர் காதல் ஜோடிகளின் நண்பர்கள் ஒரு சிலர் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் தொனியில் பேசியதால் பரபரப்பு நிலவியது.

நாடகமா? விளம்பரமா?

காதலில் வெற்றியடைந்ததாக பல் இளித்தவாறே வந்த காதல் ஜோடி போலி சுயமரியாதை திருமணம் செய்து விட்டு பல்பு வாங்கி திரும்பிச் சென்றது. ஏற்கெனவே தங்கள் மதத்தின்படி திருமணம் செய்து விட்டு பெரியாரின் முன்பு உறுதிமொழி எடுத்தால் மட்டும் இது சுயமரியாதை திருமணம் ஆகி விடுமா?

மேலும் படிக்க | 2023ல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படங்கள்..!

அல்லது சுயமரியாதைத் திருமணம் செய்தால் அரசின் கடைக்கண் பார்வையும், நிதியுதவி ஏதேனும் கிடைக்கும் என்ற ரீதியில் நடத்திய நாடகமா? இல்லை பெரியாரின் பிள்ளைகள் என்று ஒரே நாளில் பிரபலமடைந்து விடலாம் என நினைத்த விளம்பரப் பிரியர்களா? என்ற பேசிக் கொண்டனர் அந்த பகுதி மக்கள்.