விவசாய நிலங்களில் வாய்க்கால் வெட்டிய என்எல்சி...!! தடுத்து நிறுத்திய விவசாயிகள்...!!

விவசாய நிலங்களில் வாய்க்கால் வெட்டிய என்எல்சி...!! தடுத்து நிறுத்திய விவசாயிகள்...!!

சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் விவசாய நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கிய என்எல்சி நிர்வாகம்.

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயன்று வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து வரப்பட்ட நிலையில் சிலகாலமாக பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் உள்ள வயல் நிலங்களில் என்எல்சி நிறுவனம் திடீரென வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் வாய்க்கால் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலம் எடுப்பது தொடர்பாக இதுவரை என்எல்சி நிறுவனம் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை எனவும் தர வேண்டிய இழப்பீடு இதுவரை வந்து சேரவில்லை எனவும் விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் திடீரென என்எல்சி நிறுவனம் வாய்க்கால் வெட்டும் பணிகளை தொடங்கியதற்கு விவசாயிகளிடையே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வயல் நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியில் நான்கு ஜேசிபி இயந்திரம் மூலம் வணிகரை தொடங்கிய என்எல்சி நிர்வாகம் அதிகாரிகள் மக்கள் எதிர்ப்பால் வேலையை பாதியில் நிறுத்திவிட்டு திரும்பிச் சென்றனர். என்எல்சி நிறுவனம் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனவும் தங்களுக்கான நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.