இந்தியாவிலேயே முதல் மருத்துவமனை சென்னையில்.. விரைவில்..!

இந்தியாவிலேயே முதல் மருத்துவமனை சென்னையில்.. விரைவில்..!

கிண்டி கிங்ஸ் மருத்துவமனை

சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தொழில்நுட்ப பிரச்சனை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார் இது குறித்த அவரிடம் நேரில் சந்தித்து கூறப்படும் 

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முதியோர்களுக்கான முதல் மருத்துவமனை

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை கிண்டியில் தேசிய முதியோர் நல மருத்தவமனை 87.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள், பல்வேறு அடிப்படை வசதிகள் செயப்பட்டு வருகிறது, இன்னும் ஒரு சில நாட்களில் தயார் நிலைக்கு வர இருக்கிறது. இந்தியாவிலேயே முதியோர்களுக்கான பிரத்யேக முதல் மருத்துவமனையை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விரைவில் திறந்த வைப்பார். 

75 புதிய ஆம்புலன்ஸ்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 22ஆம் தேதி சுகாதாரத் துறை சார்பில் மனநல மருத்துவமனைக்கு வந்து அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையத்தை திறந்து வைக்க இருக்கிறார். மேலும், 24 லட்சம் மதிப்பீட்டில் 75 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கி வைக்க இருக்கிறார்.

கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வருகிற மே அல்லது ஜூன் மாதத்திற்குள் இந்த கட்டிட பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

நட்புடன் உங்களோடு

மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்படும் மன உலைச்சலை போக்கும் வகையில் "நட்புடன் உங்களோடு" அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதற்கான
தொலைபேசி தொடர்பு எண்கள் அடங்கிய புத்தகங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மாதம் 22 ம் தேதி  வெளியிட இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மனநல மருத்துவம் மையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் கவுன்சிலிங் மற்றும் மனநல சிகிச்சைகள் மக்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

மருத்துவ காப்பீடு திட்டம்

மருத்துவ காப்பீடு பணத்தை பெற்று அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படவில்லை எனவும் அரசு சார்பிலே தனியாக அதுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும் அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால் தனியார் மருத்துவமனைகள் இதுகுறித்து தவறான தகவல்களை பரப்புவதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க: சரணடைந்த பாகிஸ்தான் படைகள்.. வெற்றியடைந்த இந்தியா..! 

அமைச்சர் நம்பிக்கை

நீட் தேர்வு விலக்கு பெற அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது, தொடர்ச்சியாக துறை சார்ந்த  விளக்கம் அளித்து வருகிறோம்.  நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

- அறிவுமதி அன்பரசன்