மகளை கணவனுடன் சேர்த்தது தவறா ?இதற்கெல்லாம் கொலையா ?

மகளை கணவனுடன் சேர்த்தது தவறா ?இதற்கெல்லாம் கொலையா ?

தவறான வழியில் சென்ற தன் மகளை கண்டிக்காமல் தனது மகளுக்கு அறிவுரை கூறி கணவனுடன் சேர்த்த நபரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த குடும்பத்தினர் 7 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

ஈரோடு அடுத்த பெரிய சேமூர் கல்லான் கரடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் லட்சுமி தம்பதியினர், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.இந்த நிலையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த 2018 ம் ஆண்டுஆகஸ்ட் 9ந் தேதி லட்சுமி தன் கணவன் மற்றும் குழந்தைகளை தனியே விட்டு தன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

கொலை சம்பவம் :

இந்த நிலையில் தலைமறைவான லட்சுமியை தேடி அவரது உறவினரான செல்வக்குமார், சேலம் சென்று லட்சுமியை மீட்டு அவரின் கணவருடன் சேர்த்துள்ளார்.இந்த விவகாரத்தில் லட்சுமியின் குடும்பத்தினருக்கும் செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தகராறில் கடந்த 2018 ஆகஸ்ட் 28 அன்று  தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செல்வகுமாரை  பெரிய சேமூர் அருகே வழிமறித்த லட்சுமியின் குடும்பத்தினர் ஆயுதங்களால் தாக்கியும் கத்திரிக்கோலால் மார்பில் குத்தியும் கொலை செய்தனர். இது தொடர்பாக செல்வகுமாரின் மனைவி நீலாவதி அளித்த புகாரின் பெயரில் வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமியின் குடும்பத்தினர் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஐந்தாண்டு கடுங்காவல் சிறை :

இந்த வழக்கு ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் லட்சுமியின் குடும்பத்தினர் ஜோதிமணி,லட்சுமி, பரமேஸ்வரி, குமரேசன்,அண்ணாதுரை, மூர்த்தி, பாப்பம்மாள், உள்ளிட்ட ஏழு பேருக்கும் ஆயுள் சிறை தண்டனையும் முதல் குற்றவாளியான ஜோதிமணிக்கு கூடுதலாக ஐந்தாண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார்.உறவுக்கார இளைஞரை திருமணம் செய்துகொண்ட தன் மகள் குடும்பத்தினருடன் வாழாமல் சென்று விட்ட நிலையில்  அறிவுரை கூறி கணவனுடன் சேர்த்து வைத்த நபரை தாக்கி கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.