எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற கம்பன் திருவிழா.....

எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற கம்பன் திருவிழா.....

எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ் முதுகலை மற்றும் உயராய்வுத் துறை சார்பாக கம்பன் விழா நடைப்பெற்றது. நிர்வாக குழு தலைவர் வி. எம் முரளிதரன் தலைமையுரை ஆற்றினார்.  கம்பன் கவியின்பம் என்ற தலைப்பில் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் சிறப்புரை ஆற்றினார். 

தமிழ் குறித்தும் , மொழியின் சிறப்பு குறித்தும் விரிவாக விவரித்தார்.  மேலும் ‘ழ’ கரம் தான் தமிழின் சிறப்பு என கூறிய அவர், கம்பரின் பாடல்களில் வரும் சந்தங்களை அவற்றின் ஒப்பற்ற கூறுகளை பற்றியும் விவரித்தார். 

பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான மாணவிகள் இவ்விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.  இறுதியாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதையும் படிக்க:  தைப்பூசத் தினத்தில் தெப்பத் திருவிழா....