திருவிழா போல மாறிய காசிமேடு மீன் மார்க்கெட்...!!

திருவிழா போல மாறிய காசிமேடு மீன் மார்க்கெட்...!!

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய இரண்டாம் ஞாயிற்று கிழமையில் மீன் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்ததால் காசிமேடு திருவிழா போல காட்சியளிக்கிறது.

மீன் மார்க்கெட்டில் பெரிய மீன்களின் வரத்து இல்லாததால் சிறிய மீன்களின் விலை சற்று உயர்வாகவே காணப்பட்டு வருகிறது.  இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் மீன் பிரியர்கள் காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஆவலாக மீன்களை வாங்கி செல்கின்றனர்.  தமிழ்நாட்டில் மீன்களின் இனப்பெருக்க வளர்ச்சி காரணமாக ஏப்ரல் 15 முதல் ஜீன் 14 வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த கால கட்டத்தில் விசைப்படகுகள் ஏதும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடந்த வாரம் இந்த தடைகாலமானது தொடங்கிய நிலையில் இன்று  கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சிறிய வகை விசைப்படகுகள் கரைக்கு திரும்பின.  நள்ளிரவு இரண்டு மணி அளவில் ஏல முறையில் தொடங்கிய இந்த விற்பனையில் சென்னையின் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு சந்தை பகுதிகளில் கடை வைத்திருக்க கூடிய பெருவியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  வஞ்சிரம் மீன் ஆயிரத்து 500 ரூபாய் வரையும், கொடுவா மீன் 950 ரூபாய் வரையும் விற்பனையாகி வருகிறது.

இதையும் படிக்க:  மனிதாபிமான வளர்ச்சி வேண்டும் -கொளத்தூர் மணி...!!