அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி...

அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி...

அரியலூர் | ஜெயங்கொண்டம் ஒன்றியம் , புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மனவள மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான முன்னோடி திட்டங்களில் ஒன்றான தற்காப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு, மன வளத்தை பெருக்கவும், மன பயம் போக்கவும், மன இறுக்கம், மன அழுத்தம் குறைத்து மன தைரியத்தை உருவாக்கி நற்சிந்தனையுடன் கற்றலில் மேம்படுத்திக்கொள்ள இந்த மனவள மற்றும் தற்காப்புகலை பயிற்சியானது வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஒரே நேரத்தில் ; ஒரே இடத்தில் வாக்கு சேகரித்த அரசியல் கட்சியினர்...!

பயிற்சியின் துவக்க விழா ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் இராசாத்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனவள மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகளை மகாகுரு ஷிஹான் பொன்னுசாமி மாஸ்டர் வழங்கினார். இந்த பயிற்சியானது மூன்று மாத கால அளவில் நடைபெற உள்ளது. நிறைவாக பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.

மேலும் படிக்க | பேசுப்பொருளாகவே இருக்கும் பாலின சமத்துவம்.... விளையாட்டுத்துறையிலிருந்து மாற்றுவோம்!!!