இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்...

சென்னை | தாம்பரம் முடிச்சூர் பிரதான சாலையில் வ சித்து வருபவர் கார்த்திகேயன் (வயது-26) இவர் கல்லூரியில் பி.இ படிக்கும் போதே அவருக்கு பிடித்த R15 இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என கனவு இருந்து அப்போது கையில் பணம் இல்லாததால் மூன்று வருடமாக கல்லூரி படித்துக் கொண்டே பகுதிநேர வேலை பார்த்து சிறுக சிறுக பணம் சேமித்து அவருக்கு பிடித்த இருசக்கர வாகத்தை வாங்கி பயண்படுத்தி வந்தார்.

மேலும் படிக்க | மளிகைக் கடையில் நூதன முறையில் திருட்டு - போலீசார் வலைவீச்சு

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலை கிடைக்கும் வரை தாம்பரம் சண்முக சாலையில் காய்கறி கடை நடத்தி வரும் நிலையில் இரவு காய்கறி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று வீட்டின் வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார்.காலையில் எழுந்து வெளியே வந்து பார்க்கும்போது ஆசையாக வாங்கிய இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச் சி அடைந்தார்.

மேலும் படிக்க | நிறுத்தி வைத்த பைக்கில் திருட்டு... வைரலான பள்ளி மாணவர்கள் வீடியோ...

உடனே அப்பகுதியில்  பொருத்தப்பட்ட சி சிடிவி கேமரா காட் சியை ஆய்வு செய்து பார்க்கும்போது ஒரு நபர் இருசக்கர வாகனத்தை லாவகமாக மூன்று திமிடங்களில் ஓட்டி சென்றது தெரியவந்தது. உடனே இது குறித்து தாம்பரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் சி. சி.டிவி காட் சிகளுடன் சென்று புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்...!!

தொடர்ந்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்து வருகிறது. திருடி செல்லும் வாகனங்களை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நான் பறிகொடுத்த வாகத்தை திருடர்களிடம் இருந்து எப்படியாவது மீட்டு தரவேண்டு என பாதிக்கப்பட்டவர் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது...