கிணற்றுக்குள் விழுந்த நாயை பாதுகாப்பாக மீட்ட அதிகாரிகள்...

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த தெரு நாயை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கிணற்றுக்குள் விழுந்த நாயை பாதுகாப்பாக மீட்ட அதிகாரிகள்...

காஞ்சிபுரம் | ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்  உள்ளது கோவில் அருகே 30 அடி ஆழக்கிணறு பராமரிப்பு இன்றி இருந்துள்ளது இந்நிலையில் பராமரிப்பின்றி இருந்த கிணற்றில் தெரு நாய் ஒன்று இன்று காலை தவறி விழுந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள்  நாயை கயிறு மூலம் கட்டி மீட்க  முயற்சி செய்துள்ளனர். பொதுமக்களின் முயற்சி தோல்வியுற்றதை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆறுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் 30 அடி ஆழ கிணற்றில் இறங்கி நாயை கயிறு கட்டி உயிருடன் பத்திரமாக மீட்டனர். நாயை மீட்டவுடன் தீயணைப்பு துறையினர் நாயிடம் விளையாட முயன்றனர் ஆனால் அந்த நாய் அவர்களை கண்டு அஞ்சி ஓட்டம் பிடித்தது. மேலும் கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை உயிருடன் மீட்ட  இந்த செயல் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் நகைப்பையும்  பெற்றது.

மேலும் படிக்க | வளர்ப்பு நாயை வேட்டையாட துரத்தி செல்லும் சிறுத்தையின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள்...