உயிருக்கு போராடிய மூதாட்டி - உதவிய SP - பொதுமக்கள் பாராட்டு

உயிருக்கு போராடிய மூதாட்டி - உதவிய SP - பொதுமக்கள் பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் உயிருக்கு போராடிய மூதாட்டியை அரசு மருத்துவமனையில் சேர்த்துசிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த SPக்கு பொதுமக்கள் பாராட்டு.

உணவின்றி உயிருக்கு போராடிய மூதாட்டி 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உணவுக்கு வழியின்றி பசியுடன் இருந்த மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட கண்காணிப்பாளர் அனுமதித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மாயாண்டிபட்டி தெருவில் மூதாட்டி ஒருவர் உணவு ஏதுமின்றி உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாகவிருதுநகர் மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசபெருமாளுக்கு தகவல் கிடைத்தது.இந்த தகவலின் அடிப்படையில் நேற்று  விருதுநகரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ஸ்ரீனிவாச பெருமாள் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

மேலும் படிக்க | கல்குவாரி செயல்பட தடை - நீதிமன்றம் உத்தரவு - காரணம் என்ன?

மேலும் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டிக்கு உதவிக்காக ஒரு பெண் காவலர் ஒருவரும் நியமித்து உத்தரவிட்டார்.இதுகுறித்து விருதுநகர் மாவட்ட எஸ்பி கூறும்போது தனக்கு பிரத்தியோக தகவல் கிடைத்து மூதாட்டி பார்க்க வந்தேன் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சிகிச்சை பெற்றுஉடல் நலம் தேறியவுடன் முதியோர் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சீனிவாச பெருமாள் எஸ் பி வரும்போது பழங்கள் மற்றும்  அணிவிக்க உடை கொண்டு வந்து வழங்கினார்.ஆதரவற்ற நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டி பற்றி தகவல் கிடைத்தவுடன் மூதாட்டியை பார்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த எஸ்பி யை பொதுமக்கள் பாராட்டினர்.