கொட்டிய மழையில் சிக்கித் தவிக்கும் சிதம்பரம்...!

சிதம்பரத்தில் 30 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கொட்டிய மழையில்  சிக்கித் தவிக்கும் சிதம்பரம்...!

சிதம்பரம் : வடகிழக்கு பருவமழை, வழக்கம் போல் கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் வெள்ளக் காடாய் காட்சி அளிக்கும் நிலையில்,  சிதம்பரத்தில் ஒரே நாளில் 30 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க | மக்களே உஷார்...!கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு...எந்தெந்த இடங்கள் தெரியுமா?

இதனால் சிதம்பரம் நகரில் உள்ள சிவசக்திநகர், எஸ்.ஆர். நகர், முருகன் கோவில் தெரு, இந்திராநகர், எம்.கே. தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழையால் சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளம் நிரம்பியது.

இந்நிலையில் குளத்தின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம்டைந்துள்ளனர். தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் மழை நீர் தேங்கியது. தண்ணீர் வெளியேறுவதற்கான வடிகால் இல்லாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

மேலும் படிக்க | புதிதாகக் கட்டப்பட்ட கால்வாயில் சிக்கிய ‘கேஸ்’ லாரியால் போக்குவரத்து பாதிப்பு...

சிதம்பரம் நகரை சுற்றி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஓமக்குளம் பகுதியில், குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.

பொக்லைன் எந்திரம் மூலம் வடிகால் வாய்க்காலை சீரமைக்கும் பணிகளைளை துரிதப்படுத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.  ஆகாயத் தலம் என்று அழைக்கப்படும் சிதம்பரம், இப்போது நீர்த்தலமாக மாறி உள்ளது.

மேலும் படிக்க | தொடர்மழையால் வெறிச்சோடிக் காணப்பட்ட ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி...