“திருவோடு கொடுங்கள் பிச்சை எடுக்கிறேன்!”- சாமியார் பாஸ்கரானந்தா கதறல்...

பல்லடம் காவல்நிலையத்தில் “ஆன்மீகவாதியை அழ வைக்காதீர்கள்” என சாமியார் பாஸ்கரானந்தா கண்ணீர் விட்டு கதறியதை கண்டு அவரது ரசிகர்களை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“திருவோடு கொடுங்கள் பிச்சை எடுக்கிறேன்!”- சாமியார் பாஸ்கரானந்தா கதறல்...

பாலியல் குற்றவழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தாவை போன்று இருப்பவர் பாஸ்கரனந்தா. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில்  ஆசிரமம் வைத்து தனது பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். 

மேலும் படிக்க | நித்தியானந்தா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.. திருச்சி சூர்யாவுக்கு தர்மரட்சகர் விருது..!

இந்நிலையில் ஆசிரமத்தின் நில உரிமையாளர் செல்வகுமார் என்பவர் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாதவில்லை எனக் கூறி வேறு ஒருவருக்கு ஏலம் விட்டதாக கூறப்படுகிறது. இரவோடு இரவாக பாஸ்கரானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது. இதுதொடர்பாக பல்லடம் காவல்நிலையத்தில் பாஸ்கரானந்தா புகாரளிந்திருந்தார். 

மேலும் படிக்க | நட்டநடு சாலையில் அங்கபிரதட்சணம் செய்த நித்தியானந்தா.. தரமான சாலை கோரி இந்த போராட்டம்..!

அதன்பேரில் கடந்த மூன்று நாட்களாக காவல்நிலையத்தில் விசாரணை நடத்தி வரும் நிலையில் புதன்கிழமை மூன்று பேருந்துகளில் தனது பக்தர்களின் புடை சூழ காவல் நிலையத்திற்கு வந்தார் பாஸ்கரானந்தா. 

இதனை பார்த்த போலீசார் ஏன் நீங்கள் இவ்வளவு கூட்டத்தை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளீர்கள் என கேட்டுள்ளனர்.அதற்கு சாமியார் திருவோடு வாங்கி தாருங்கள் பிச்சை எடுக்கிறேன், தனது வாழ்க்கையே பாதிக்கப்பட்டதாக  தெரிவித்து கதறி அழுதுள்ளார். 

மேலும் படிக்க | ‘நித்தி’யின் உடல்நிலை மோசமடைந்ததா? : சிகிச்சைக்கு அனுமதி கோரி இலங்கை அதிபருக்கு கடிதம் !!

இதனால் சாமியாரை சுற்றி இருந்த பக்தர்கள் கலக்கமடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவரையும் பேருந்தி ஏற்றி அனுப்பி வைத்து சாமியாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | நித்தியானந்தாவிற்கு 19 அடி உயர சிலை : கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திய சீடர் !!