தனியாரில் விற்கப்படும் விதை நிலக்கடலைகள் தரம் இல்லை...விவசாயிகள் குற்றச்சாட்டு...

தனியாரில் விற்கப்படும் விதை நிலக்கடலைகள் தரம் இல்லை...விவசாயிகள் குற்றச்சாட்டு...

தனியார் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் விதை நிலக்கடலைகள் தரமற்று காணப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் .

தமிழகத்தில் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை ,சம்பா,தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.இதில் ஒரு பகுதியான காவிரி பாசன நீர் எட்டாத விளைநிலங்களில் மானாவாரி பயிரான கடலை,எள்,உளுந்து, பாசிப்பயிர்,கம்பு என ஆகிய பயிர்களை விவசாயிகளுக்கு பயிரிட்டு வருகின்றனர்.

குறிப்பாக திருவோணம் , ஒரத்தநாடு,மதுக்கூர் ,வடசேரி உள்ளிட்ட ஊர்களில் கடலை அதிகமாக விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.மானாவாரி பயிரான நிலக்கடலை விதைக்கும் பணி தற்போது மும்முறமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் 35 கிலோ கொண்ட நிலக்கடலை விதைகள் ரூபாய் 4500 முதல் 4800 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் தரமற்ற விதைகளாக உள்ளன,எனவே தமிழக அரசே தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும், தரமற்ற விதைப்பொருட்களை வழங்கும் தனியார் நிறுவனங்களை  நடவடிக்கை  எடுக்க வேண்டும் . 

நிலக்கடலை காண விதைப்பொருளை தனியார்  மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கடலை விதைகள் முளைப்புத்திறன் இல்லாமல் உள்ளது, விளைநிலங்களில் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பலன் அளிக்காமல் உள்ளது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் .வேளாண்துறை நிலக்கடலை  கொள்முதல் செய்து தரமான கடலை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.