குழந்தைகள் நல காப்பகத்தில் தப்பியோடிய குழந்தைகள்... !!

குழந்தைகள் நல காப்பகத்தில் தப்பியோடிய குழந்தைகள்... !!

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து வெளியேறிய நான்கு சிறுவர்களை காவல் துறையினர் கண்டுபிடித்து குழந்தைகள் நல காப்பக அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 62 மாணவர்கள் தங்கி கல்வியினை பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி இருந்த சூர்யா(10),  பூபதி(12), சூர்யா(13), தினேஷ்(10) ஆகிய நான்கு மாணவர்கள் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து வெளியேறி விட்டதாக ராணிப்பேட்டை காவல் துறையினருக்கு துறை சார்ந்த பணியாளர்கள் மூலமாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உத்தரவின் பெயரில் இரண்டு தனி காவல் குழுவினர் அமைக்கப்பட்டு நான்கு சிறுவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நான்கு சிறுவர்களும் திருவண்ணாமலை மாவட்டம் புள்ளவாடி மற்றும் படவேடு ஆகிய பகுதிகளில் உள்ள பெற்றோர்களின் வீட்டிற்கு சென்றிருப்பதை காவல் துறையினர் அறிந்து சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களது பெற்றோர்களிடம் தகவலை தெரிவித்து மீண்டும் நான்கு சிறுவர்களையும் மீட்டு கொண்டு வந்து குழந்தைகள் நல காப்பக அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிக்க:  பழனி கோயிலில் நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை... காரணம் என்ன?!!