சேலம்: தகாத உறவால் பறிபோன மனைவி 2 மகன்கள் உயிர்.. ஜாமினில் வெளியே வந்த கணவன் தற்கொலை..!

சிறையிலிருந்து வெளியே வந்தவர் குலதெய்வ கோயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..!

சேலம்: தகாத உறவால் பறிபோன மனைவி 2 மகன்கள் உயிர்.. ஜாமினில் வெளியே வந்த கணவன் தற்கொலை..!

குடும்பமும், தகாத உறவும்:

சேலம் மாவட்டம் கே.மோரூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு மரகதம் என்ற மனைவியும் 2 மகன்களும் இருந்தனர். 3 பேரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், பிரபாகரனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

மனைவி, 2 மகன்கள் தற்கொலை:

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட, விரக்தியில் மனைவி மரகதம் தனது 2 குழந்தைகளுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

ஜாமினில் வெளியே வந்த பிரபாகரன்:

இந்த வழக்கில் பிரபாகரனும், அவரது கள்ளக் காதலியும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளனர். ஜாமினில் வெளியேவந்த பிரபாகரன் என்ன செய்வதென்று தெரியாமல் ஆங்கும் இங்கும் அலைந்து திரிந்துள்ளார். 

குலதெய்வ கோயிலில் தற்கொலை:

இறுதியில் விரக்தியின் உச்சத்திற்கு சென்றவர், செம்மாண்டபட்டி பகுதியில் உள்ள தனது குலதெய்வ கோயிலுக்கு சென்று அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

போலீசார் விசாரணை:

தகவலறிந்து வந்த காவல்துறையினர், பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க : ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை..!