வகுப்பில்லாமல் தவித்து வரும் மாணவர்களுக்கு வகுப்பறைகளைக் கட்டித்தருமாறு கோரிக்கை...

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறைகள் இல்லாமல் தவிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை கட்டித் தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வகுப்பில்லாமல் தவித்து வரும் மாணவர்களுக்கு வகுப்பறைகளைக் கட்டித்தருமாறு கோரிக்கை...

புதுக்கோட்டை | கறம்பக்குடி அருகே முத்தானப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 50 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த தொடக்கப்பள்ளி 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த வருடம் மார்ச் ஒன்பதாம் தேதி பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது உயிர் சேதம் இன்றி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும் படிக்க | மாநில அளவிலான கால்பந்து போட்டி... 40 அணிகள் பங்கேற்பு...

இதனை அடுத்து தகவல் அறிந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முத்தானப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வின் அடிப்படையில் பள்ளி கட்டிடம் முற்றிலுமாக சேதமடைந்தது தெறியவந்தது.

உடனடியாக பள்ளி கட்டிடம் அகற்றப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை வகுப்பறை இல்லாமல் கோயிலிலும் கலை அரங்கத்திலும் வெட்ட வெளியிலும் கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | கொரோனாவிற்கு பிறகு தமிழ்நாட்டில் மாணவர்களின் படிப்பாற்றல் குறைவு - ஆய்வில் தனியார் நிறுவனம் அதிர்ச்சி!!!!

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இதனால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு முத்தானப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம்  அமைத்து தரக்கோரியும் பள்ளி வளாகத்தை ஒட்டி குளம் நீர் நிறைந்து காணப்படுகிறது.

இதனால் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக்கள் நேரிட வாய்ப்புள்ளதாகவும் பள்ளி வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தரக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | உலக அளவில் இரண்டாமிடம்.... தமிழ்நாடு மாணவி சாதனை.....