முதலமைச்சரின் கோரிக்கையை நிறைவேற்றிய இல்லத்தரசிகள்.....

முதலமைச்சரின் கோரிக்கையை நிறைவேற்றிய இல்லத்தரசிகள்.....

தமிழகம் -தமிழ்நாடு என வார்த்தைப் போர் நடைபெற்று வரும் சூழலில் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க என்று கோலம் அமைத்து சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து வரும் இல்லத்தரசிகள்.

பொங்கல் வாழ்த்து:

செழிக்கட்டும் தமிழ்நாடு! இதன் மூலம் தமிழ் மொழி மீதும், தமிழ்நாட்டின் மீதும் தாங்கள் வைத்துள்ள பற்றை தமிழர்கள் உணர்த்தியுள்ளார்கள்.  தமிழகம் என்று அழைப்பதா, தமிழ்நாடு என அழைப்பதா என்ற விவாதங்களும், வார்த்தைப் போர்களும் நடைபெற்றும் வரும் சூழலில் தமிழ்நாடு வாழ்க என தமிழர்கள் இல்லங்களில் கோலமிடப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

முதலமைச்சரின் கோரிக்கை:

சிறந்து இனிக்கட்டும் பொங்கல் திருநாள்! என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின்  விடுத்திருந்த வாழ்த்து மடலில், ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் 'தமிழ்நாடு வாழ்க' எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் எனக் கோரிக்கை வைத்திருந்தார். 

நிறைவேற்றிய இல்லத்தரசிகள்:

இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்கும் விதமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் தமிழ்நாடு வாழ்க, வாழ்க தமிழ்நாடு என்ற வாசகங்களுடன் கூடிய வண்ணக் கோலங்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்கும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில் தமிழகம் VS தமிழ்நாடு சர்ச்சைக்கு, தமிழ்நாடே என்று பெருமைப்படுத்தும் வகையில் வாசலில் கோலம் அமைத்து தங்களின் உணர்வை வெளிப்படுத்தி உள்ளனர் கிராமத்தைச் சேர்ந்த இல்லத்தரசிகள்.  

ஆன்லைனில் வைரல்:

மேலும் தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க என்ற பூட்டை கிராம வெள்ளத்தரசிகளின் கோலங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர் கைதும் விசாரணையும்.....