சிவகங்கை: ரூ.300 லஞ்சம் கேட்ட ஊராட்சிமன்ற தலைவர்.. 4 ஆண்டுகள் சிறை தண்டனை..!

சிவகங்கை: ரூ.300 லஞ்சம் கேட்ட ஊராட்சிமன்ற தலைவர்.. 4 ஆண்டுகள் சிறை தண்டனை..!

குடிநீர் இணைப்பு:

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகேயுள்ள ஆலங்குடி ஊராட்சி மேலமாகாணம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவர் கடந்த 2002-ம் ஆண்டு தனது வீட்டில் குடிநீர் இணைப்பு பெற அப்போதைய ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ராணி ஆரோனை அணுகியுள்ளார். 

ரூ.300லஞ்சம்:

அதற்கு ராணி ரூ.300 லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து கணபதி சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அவர்களது அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஊராட்சி தலைவரிடம் கணபதி கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ராணி ஆரோனை கைது செய்தனர்.

4 ஆண்டுகள் சிறை:

இது தொடர்பான வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ராணி ஆரோனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.