அண்ணாமலை குறித்து அவதூறு வீடியோ பரப்பிய நபர்...! கைது செய்த போலீசார்..!

அண்ணாமலை குறித்து அவதூறு வீடியோ பரப்பிய நபர்...! கைது செய்த போலீசார்..!

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பத்திரிக்கையாளரிடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகளை வைத்து கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது தாயார் குறித்து ஆபாசமாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த காட்சிகள் வைரலான நிலையில், அண்ணாமலை மற்றும் தாயார் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன், உள்ளிட்டோர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.  

இதனிடையே சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பிய நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாமலை குறித்து முகநூலில் ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் ரமேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b),504,505(1)(b),509 ஆகிய பிரிவுகளின் கீழ் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கைது செய்தவரை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க : ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விதிக்கப்பட்ட தடை வேதனை அளிக்கிறது - முன்னாள் அமைச்சர் விஜயபஸ்கர்