நிகழ்ச்சியும்.... நெரிசலும்.... உயிரிழப்பும்....

நிகழ்ச்சியும்.... நெரிசலும்.... உயிரிழப்பும்....

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஜல்லி நிறுவனம் நடத்தி வரும் என்பவர் ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு   இலவசமாக சேலைகள் வழங்குவது வழக்கமாகும்.  அதன்படி, 05 ஆம் தேதி  தைப்பூசத்தை முன்னிட்டு சேலைகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த டோக்கன்களைப் பெறுவதற்காக சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் ஐய்யப்பன் ஜல்லி நிறுவன நுழைவாயில் அருகே குவிந்து இருந்தனர். 

பின்னர் நுழைவு வாயில் திறக்கப்பட்டதால், அங்கிருந்த பெண்கள் முண்டியத்துச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார்  16 பெண்கள் மயக்கமடைந்தனர்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை மற்றும் போலீசார் மயக்கமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.  இதில்,  சிகிச்சை பலனின்றி நான்கு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்ற வருவாய்க் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவம் குறித்து விசாரித்தனர். 

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்த அய்யப்பன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:   சர்ப்ப காவடி எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை......