கோவை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததில் எந்த உள்நோக்கமும் இல்லை.. தமிழிசை சவுந்தராஜன் விளக்கம்..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விட்டது - தமிழிசை சவுந்தராஜன்..!

கோவை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததில் எந்த உள்நோக்கமும் இல்லை.. தமிழிசை சவுந்தராஜன் விளக்கம்..!

தமிழ்த்தாய் வாழ்த்து எங்கே?

கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசிய கீதம் மட்டுமே பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததால் சர்ச்சை எழுந்தது. 

எந்த உள்நோக்கமும் இல்லை:

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்றும்  செமினார் என்பதால் பாடவில்லை என நினைப்பதாகவும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து  ஏன் பாடவில்லை என்று கேட்டதாகவும் ஆனால் அதற்குள் நிகழ்ச்சி தொடங்கி விட்டதால் விட்டு விட்டதாகவும் கூறினார்.