விரும்பி வாங்கிய இருசக்கர வாகனத்திலேயே விபத்தில் சிக்கிய சோகம்...!

விரும்பி வாங்கிய இருசக்கர வாகனத்திலேயே விபத்தில் சிக்கிய சோகம்...!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாளேத்தோட்டம் அருகே உள்ள எரம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பாளேத்தோட்டம் அடுத்த சின்னபாளேத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் திருப்பதி (21) தனியார் கம்பெனியில் பணியாற்றி வரும் இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து போச்சம்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது எரம்பட்டி அருகே தண்ணீர் டிராக்டர் முகப்பு விளக்குகளை எரியாமல் சென்றுள்ளது. இதனை அறியாமல் சென்ற திருப்பதி தண்ணீர் டிராக்டர் மீது பலமாக மோதினார். அதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரை மீட்க ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தும், வாகனம் வர கால தாமதம் ஏற்பட்டதால் தான் இந்த இறப்பு ஏற்பட்டது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தற்போது கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு சக்கர வாகனத்தை வாங்கிய நிலையில், இந்த விபத்து நிகழ்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் இதுபோன்று அலட்சியமாகவும் அதிவேகமாக வாகனத்தை இயக்குவதால் இது போன்ற  விபத்துகள் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க : மத்திய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரமும் தேசத்தலைவர்களின் கோரிக்கைகளும்..!!