திருச்சி: மீண்டும் ஒரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி.. கல்லூரி மாணவன் எடுத்த சோக முடிவு..!

தனது சாவுக்கு காரணம் ஆன்லைன் ரம்மி தான் என வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்..!

திருச்சி: மீண்டும் ஒரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி.. கல்லூரி மாணவன் எடுத்த சோக முடிவு..!

ஆன்லைன் ரம்மியில் ஆர்வம்:

திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ். தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வமாக இருந்தவர் காலப் போக்கில் அதற்கு அடிமையாகியுள்ளார். 

தங்க மோதிரத்தை விற்று சூதாட்டம்:

பணத்தை வைத்து விளையாடி வந்த சந்தோஷ், பணத்தை தொடர்ந்து இழந்து வந்துள்ளார். விட்டதை பிடிக்க நினைத்து, வீட்டில் இருந்த தங்க மோதிரத்தை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் பந்தயம் வைத்துள்ளார். 

ரயில்முன் பாய்ந்து தற்கொலை:

பந்தயத்தில் தோல்வியுற்று பணத்தை இழந்ததால் விரக்தியில் இருந்த சந்தோஷ், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

முழுக் காரணம் ரம்மி தான்:

அதற்கு முன்னதாக, தன்னுடைய மரணத்திற்கு முழுக் காரணம் ஆன்லைன் ரம்மி தான் என்றும், அதிக பணம் இழந்ததால் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.