சாந்தோம் நெடுஞ்சாலையில் சுரங்க நடைபாதை ...?!!

சாந்தோம் நெடுஞ்சாலையில் சுரங்க நடைபாதை ...?!!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாந்தோம் நெடுஞ்சாலையில் பாதசாரிகள் வசதிக்காக சுரங்க நடைபாதை அமைக்கவும், ஏற்கனவே உள்ள பாலத்தில் நீர்வழிப் பாதையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை லூப் சாலையில் இருந்து மந்தைவெளி செல்லும் தெற்கு கால்வாய் சாலையை இணைக்க சாந்தோம் நெடுஞ்சாலை குறுக்காக சுரங்க நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து அடையாறு செல்வதற்கு டி.ஜி.எஸ்.தினகரன் சாலை வழியாக செல்ல வேண்டியுள்ளது.  போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நேரத்தில் இந்த சாலையில் பாதசாரிகள் கடப்பதினால் மேலும் நெரிசல் அதிகம் ஆகிறது.  இந்த சாலையில் அடையாற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் கீழ் நீர்வழிப் பாதை உள்ளது.  இதனை மேம்படுத்தவும் சென்னை நதிகள் சீரமைப்பு கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக லூப் சாலையில் இருந்து மந்தைவெளி செல்லும் தெற்கு கால்வாய் சாலையை இணைக்க சாந்தோம் நெடுஞ்சாலை குறுக்காக சுரங்க நடைபாதை அமைக்க திட்டமிட்டுள்ளது.  இந்த திட்டத்திற்கு சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணியினை சென்னை நதிகள் சீரமைப்பு கழகம் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க:  தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றமா..?!