திருமணமான 3 மாதத்தில் காணாமல் போன மனைவி.. வீட்டிலிருந்த நகை, பணமும் திருட்டு..!

சந்தேகமடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்..!

திருமணமான 3 மாதத்தில் காணாமல் போன மனைவி.. வீட்டிலிருந்த நகை, பணமும் திருட்டு..!

காதல் ஜோடி:

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த விஜயகுமார் - மேகலா தம்பதியின் மூத்த மகன் நடராஜன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பேக்கரியில் பணிபுரிந்த அபிநயா என்ற பெண்ணுடன் பழகி வந்த நிலையில், பிறகு இருவரும் காதலில் விழுந்தனர். 

திருமணம் முடிந்து 3 மாதம்:

இவர்களின் காதல் விவகாரம் நடராஜன் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி இருவருக்கும் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். மூன்று மாதமாக நடராஜுடன், அபிநயா சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், அபிநயா வீட்டிலிருந்து திடீரென மாயமானார். 

நகை, பணம் மாயம்:

நடராஜன் மற்றும் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். எதார்த்தமாக வீட்டில் இருந்த பீரோவை திறந்த போது, அதிலிருந்த 17 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 போன்றவையும் காணாமல் போயிருந்தது. 

போலீசார் விசாரணை:

சந்தேகமடைந்த நடராஜன் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க, வழக்குப்பதிவு செய்த போலீசார் அபிநயாவை தேடி வருகின்றனர்.