விவசாய நிலத்தில் அட்டகாசம் செய்யம் காட்டுப்பன்றிகள்...! வனத்துறையினருக்கு கோரிக்கை...!

விவசாய நிலத்தில் அட்டகாசம் செய்யம் காட்டுப்பன்றிகள்...! வனத்துறையினருக்கு கோரிக்கை...!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள எலச்சிபாளையம் மலைகிராமத்தை சேர்ந்த விவசாயி தேவராஜ் என்பவர் தனது விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்திருந்தார், இந்நிலையில் நேற்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றி கூட்டம் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த  மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தியது.

அதனை தொடர்ந்து இன்று காலை தோட்டத்திற்கு சென்ற தேவராஜ் பயிர்கள் சேதமடைந்து இருப்பதைக் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து காட்டு பன்றிகள் விவசாய நிலத்திற்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.