சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மருத்துவர்...

திருமருகல் அருகே இலவசமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சித்த மருத்துவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மருத்துவர்...
Published on
Updated on
1 min read

நாகப்பட்டிணம் | திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி கிராமத்தில் வசித்து வரும்  சித்தமருத்துவர் அஜ்மல்கான் இலவச மருத்துவ சேவையை செய்து வருகிறார். கடந்த 20 ஆண்டு காலமாக இப்பணியை செய்து வரும் இவர் வருமுன் காப்போம் என்ற விழிப்புணர்வு சேவை மையத்தை நடத்தி வருகிறார்.

இதன் மூலம் டெங்கு மலேரியா மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஆண்டுக்கு 70,000 ஆயிரம் லிட்டர் வரை நிலவேம்பு கசாயம் சொந்த பணத்தில் தயார் செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறார். கொரோனா காலத்தில் கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு பணியை தொடங்கிய இவரது சமூக சேவை 750 நாட்களை கடந்துள்ளது.

கொரோனா முதல் அலையில் இருந்து மூன்றாவது அலை வரை நாகை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இலவசமாக சித்த மருத்துவ சேவையை செய்து வருகிறார். திருமருகல், திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரணியம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கபசுரக் குடிநீர் மற்றும் கொரோனா, தற்பொழுது நிலைவி வரும் இன்ஃபுளுன்சா குறித்து இலவசமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சித்த மருத்துவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தப் பணி தனக்கு மன திருப்தியை அளிப்பதாக சித்த மருத்துவம் நிகழ்ச்சியுடன் கூறுகிறார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com