குளம் போல் மாறிய குடியிருப்பு பகுதிகள்...

திருவொற்றியூரில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

குளம் போல் மாறிய குடியிருப்பு பகுதிகள்...

கடந்த இரண்டு நாட்கள் விடாமல் பெய்த கனமழை காரணமாக சென்னை புறநகர் பகுதியான திருவொற்றியூர் பகுதியில் உள்ள அண்ணா நகர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூந்துள்ளது. அத்துடன் சேர்ந்து கழிவுநீரும் கலந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரத்தன்மையைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழைக் கொட்டித் தீர்த்தது. மழையின் தாக்கம் தற்போது குறைந்திருந்தாலும், சென்னையின் பல புறநகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தபடியாக இருக்கிறது.

மேலும் படிக்க | மக்களுக்காக அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்...வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டாரா?

முழங்கால் அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் கழிவுநீர் கலந்த மழைநீர் தேக்கங்களைக் கடந்து செல்ல வேண்டிய நிலமை பொது மக்களுக்கு உருவாகியுள்ளது. மேலும், கழிவுநீர் தேக்கங்களால், சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்பிருப்பதால், பொது மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த அண்ணா நகர் பகுதியில் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் மழைநீரைக் கடந்து செல்ல வேண்டிய அப்பாயம் இருப்பதால், பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது குழந்தைகளுக்கு பள்ளிக்ள் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வெள்ளத்தில் சூழ்ந்த நகரங்கள்... ஆரஞ்சு அலர்ட் உண்மையா?

மேலும், இங்குள்ள மின்சாரப்பெட்டிகளும் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மின்சார துண்டிப்பு மற்றும் கசிவுக்கான பிரச்சனை இருக்கிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த மழைநீரானது வீடுகளுக்குள்ளும் தேங்கி இருப்பதால், இவர்களின் நிலை மோசமாக இருக்கிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | சென்னையில் தலை சிறந்த பள்ளி வளாகத்தில் மழை நீர் தேக்கம், மின் கசிவு..!


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது 2 குழந்தைகளுடன் மண்ணெண்ண ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை நேரில் பார்த்த அவரது தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த உரக்கடை நடத்திவரும் பொன்னுரங்கன், கோமலவள்ளி தம்பதிக்கு விஜயகுமார் வயது 53, சுதானந்தம் வயது 40 ஆகிய 2 மகன்களும், பிரசன்னா வயது 50, பிரகாசவாணி வயது 47, திராவியம் வயது 42 என 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில் பிரகாசவாணி கணவருடன் சேர்ந்து வாழாமல் பெற்றோருடன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில் திராவியம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கிளாப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதுரைவீரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த திராவியத்திற்கு ரியாஷினி என்ற 5 வயது மகள் உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது குழந்தையாக விஜயகுமாரி வயது 3 என்ற பெண் குழந்தை பிறந்தது. விஜயக்குமாரின் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த திராவியம் கடந்த 3 ஆண்டுகளாக கிளாப் பாளையம் கிராமத்தில் உள்ள கணவரின் வீட்டுக்குச் செல்லாமல் தனது தாய் வீட்டிலேயே குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதனால் திராவியத்தின் கணவர் மதுரைவீரன் அடிக்கடி நத்தாமூர் கிராமத்திற்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார். 

இந்த நிலையில் மனநல பாதிக்கப்பட்டிருந்த திராவியம் வெள்ளிக்கிழமை மதியம் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேசியுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர் புத்தி பேதலித்து உளறுவதாக கருதி அவரது குடும்பத்தினர் இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. நேற்று இரவு உணவு முடிந்த பின் வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.  நள்ளிரவு நேரத்தில் திடீரென கண் விழித்து எழுந்த திராவியம் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு அதே அறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது 2 குழந்தைகளையும் சேர்த்து கட்டியணைத்துக் கொண்டார். 

இதில் திராவியம் மற்றும் அவரது மகள்கள் ரியாஷினி, விஜயகுமாரி ஆகிய 3 பேரும் அலறல் சத்தம் போட்ட நிலையில் தீயில் கருகி உயிரிழந்தனர்.  இதை அருகாமையில் உள்ள அடுத்தடுத்து அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த பொண்ணுரங்கன் உட்பட வீட்டில் இருந்த அனைவரும் எழுந்து பார்த்தனர். அப்பொழுது இச்சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னுரங்கன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சதானந்தம் மகன் விவேக் மிட்டல் மற்றும் தீயில் கருகியவர்களை மீட்க முயன்ற விஜயகுமார் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நள்ளிரவு நேரத்தில் இந்த தீக்குளிப்பு சம்பவம் காரணமாக பொன்னுரங்கத்தின் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதால் நத்தாமூர் கிராமம் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது மேலும் மூச்சுத் திணறல் காரணமாக வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறல் சத்தம் போட்டவாறு எழுந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவம் ஏற்பட்ட பொழுது வீட்டின் அனைத்து கதவுகளும் உள்பக்கமாக தாழிட்டு இருந்ததால் அந்த கிராமத்தில் உள்ள ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வீட்டின் சுவரை உடைத்து வீட்டில் இருந்த மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பொன்னுரங்கம் வீட்டின் அனைத்து பகுதிகளும் தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சோக சம்பவம் நத்தாமூர் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க:ரூ.35 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் பறிமுதல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மண் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ஓசூர் பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் தொடர் மண் திருட்டு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியருக்கும் காவல்துறைக்கும் பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் பாகலூர் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர் அப்போது பாகலூர் அருகே முதலாளி - தட்டணப்பள்ளி சாலையில் 2 டிப்பர் லாரிகளில் மண் திருடப்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அரசு அனுமதி இன்றி மண் திருடப்பட்டது தெரிய வந்தது இச்சம்பத்தில் தொடர்புடைய நந்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர்கள் ஸ்ரீநாத், சசிகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் லாரி உரிமையாளரான எல்லம்மா கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவரையும் கைது செய்தனர், மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர், மேலும் மற்றொரு லாரி உரிமையாளரான சீனிவாசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

இதையும் படிக்க   | ரூ.1 லட்சம் மதிப்பிலான கள்ள சாராய பொட்டலங்கள் பறிமுதல்.!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் காவல் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான கள்ள சாராய பொட்டலங்கள் தீ வைத்து எரிப்பு.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வீரபாண்டி, நாயனூர், ஒட்டம்பட்டு, அருணாபுரம், வசந்தகிருஷ்ணாபுரம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கள்ளத்தனமாக விற்று வந்த சாராய பொட்டலங்களை அரகண்டநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சாராயம் விற்று வந்த நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சாராயப் பொட்டலங்களை தீவைத்து எரித்தனர்.

இதையும் படிக்க | மகளிர் இடஒதுக்கீடு; குடியரசுத் துணைத் தலைவர் ஒப்புதல்..!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக வாலாஜா பாலாறு தடுப்பணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அணையிலிருந்து விநாடிக்கு 1350 கன அடி தண்ணீர்  வெளியேற்றப்பட்டுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள்  பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார். 

வாலாஜாபேட்டை அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு தடுப்பணைக்கு பெய்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 280 கனஅடியும், மகேந்திரவாடி ஏரிக்கு 270 கன அடியும், சக்கரமல்லூர் ஏரிக்கு 110 கன அடியும், தூசி ஏரிக்கு 692 கன அடியும், உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்தமாக வாலாஜாப்பேட்டை தடுப்பணையிலிருந்து விநாடிக்கு 1350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதனால் பாசன ஏரிகளுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க   | ”அமைச்சர் பொன்முடி எங்களை அவமதிக்கவில்லை” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 வாந்தி மயக்கம் அடைந்துள்ளதால் துரித உணவகத்திற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் டெல்டா என்கின்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 200 பேருக்கு கிருஷ்ணகிரி நகரில் இயங்கி வரும் சக்தி ஃபாஸ்ட் ஃபுட் என்கின்ற கடையிலிருந்து நேற்று இரவு சிக்கன் ரைஸ் வாங்கி வந்து பணி செய்யும் இடத்தில் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென்று 12 பெண்கள் 14 ஆண்கள் என 26 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பிவைத்தனர். 26 வட மாநில தொழிளாலர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 12 பெண்கள் 14 ஆண்கள் என மொத்தம் 26 நபர்களுக்கு வயிற்றுப்போக்கு மட்டும் வாந்தி ஏற்பட்ட சம்பவம் பகுதியில் சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் சக்தி  ஃபாஸ்ட் ஃபுட் கடையின் உரிமையாளர் சென்னப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் முதற்கட்டமாக சக்தி சிக்கன் ரைஸ் கடையின் உள்ள சிக்கன் மற்றும் உணவு பொருட்களை கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது கிருஷ்ணகிரி நகரில் இயங்கி வந்த சக்தி பாஸ்ட் புட் கடைக்கு நகராட்சி ஆணையர் வசந்தி, கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரிதா நவாப், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் வசந்தி மற்றும் அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடைக்கு முறையான அனுமதி மற்றும் ஆவணங்கள் சமர்பித்து பின் கடை மீண்டும் திறக்கப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  

மேலும் கடைக்கு எதிரே கே தியேட்டர் எனும் திரையரங்கு செயல்பட்டு வருகிறது அங்கு ஆய்வு மேற்கொண்ட நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளர் தியேட்டரில் உள்ள கழிவறை மற்றும் கேண்டீன் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். சுகாதாரமற்ற முறையில் கழிவறை இருப்பதும் மற்றும் தரமற்ற முறையில் உணவு இருப்பதை கண்ட அதிகாரிகள் திரையரங்க உரிமையாளரிடம் எச்சரித்து, இன்றைக்குள் இதை சரி செய்ய வேண்டும் என எச்சரித்தனர்.

இதையும் படிக்க: மீண்டும் ஒரு வேங்கைவயல்?