நடிகர் வடிவேலுவை காண திரண்ட கூட்டம்....!!

நடிகர் வடிவேலுவை காண திரண்ட கூட்டம்....!!
Published on
Updated on
1 min read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி மதுரையில் தொடங்கி உள்ள புகைப்பட கண்காட்சியை பார்வையிட வந்த நடிகர் வடிவேலுவை காண  ரசிகைகள் முண்டியடித்து கொண்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.

புகைப்பட கண்காட்சி:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, மதுரை நத்தம் சாலையில் உள்ள மேனேந்தல் மைதானத்தில், அவரது பொது வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.  இதனை வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் திறந்து வைத்தார்.  பிறகு இருவரும் சேர்ந்து புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். 

வடிவேலுவை காண:

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை நடிகர் வடிவேலு பார்வையிட்டார். புகைப்படக்கண்காட்சியை பார்வையிட வந்த நடிகர் வடிவேலுவை அமைச்சர் மூர்த்தி வரவேற்றார்.   அப்போது புகைப்படக் கண்காட்சியை காண வந்திருந்து பெண் ரசிகைகள் நடிகர் வடிவேலுவை காண  முண்டியடித்து கொண்டதுடன்  செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

வடிவேலு பேட்டி:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, முதலமைச்சரின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டது தனக்கு பெருமை என்று தெரிவித்தார்.  மேலும் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு படங்களை கண்டு நெஞ்சம் நெகிழ்ந்ததாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com