கோடை காலத்தை ஒட்டி செழித்து வளர தொடங்கிய மலர் நாற்றுகள்...

கோடை காலத்தை ஒட்டி செழித்து வளர தொடங்கிய மலர் நாற்றுகள்...

திண்டுக்கல் | கொடைக்கானலில், தோட்டக்கலைத்துறை சார்பில், எதிர்வரும் மே மாதம், அறுபதாவது மலர்க்கண்காட்சி, நடைபெற உள்ளது. அதற்காக,கடந்த ஜனவரி மாதம் முதல், பிரயண்ட் பூங்கா, மற்றும் செட்டியார் பூங்காவில், மூன்று கட்டங்களாக, லட்சக்கணக்கில், மலர் நாற்றுகள், விதவிதமாக நடப்பட்டன.

நடப்பட்ட நாள் முதல், மார்ச் மாதம் வரை, நீண்டவறட்சியானது, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நிலவியது. தற்பொழுது,தொடர்ந்து ஐந்து நாட்களாக, கோடை மழை, பெய்து வருவதால், நடப்பட்டநாற்றுகள், செழித்து வளரத்துவங்கியுள்ளன.

மேலும், பூங்காக்களில் கருகிய புல்வெளிகள் அனைத்தும், பசுமைக்கு மாறி, சுற்றுலா பயணிகளையும், கவர்ந்துவருகின்றன. எதிர் வரும், ஏப்ரல் இறுதி வாரம் முதல், நடப்பட்டநாற்றுக்களில், லட்சக்கணக்கில் வண்ண வண்ண பூக்கள், பூக்கும் என,தோட்டக்கலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | பார்வையாளர்களைக் கவரும் ஜகரண்டா மலர்கள்...