அடடா மழடா... அடமழடா. பேருந்துக்குள் கொட்டிய அருவி...

மதுரையில் அரசு பேருந்து ஒன்றிலிருந்து மழை நீர் அருவி போல் கொட்டுவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

அடடா மழடா... அடமழடா. பேருந்துக்குள் கொட்டிய அருவி...

மதுரை : தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பழைய ஓட்டை உடைசல் பேருந்துகளை இயக்கி வருவதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு டிப்போவில் உள்ள பேருந்துகள் பழுதடைந்த நிலையில் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த நிலையில் ஷட்டர்கள் கிழிந்த நிலையில் பயணிகள் அமரும்.சீட்டுகள் மேற்கூரை  ஓட்டை உடைசல் நிலையில் இருப்பதால் மழை காலங்களில் பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் படிக்க | #Exclusive | சினிமாவிற்கு அகராதியாக விளங்கும் கலைக்களஞ்சியம் கமல்...

குறிப்பாக.மதுரையில் இருந்து குருவித்துறை செல்லும் சோழவந்தான் அரசு பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தில் மேற்கூரை பழுதடைந்த நிலையில் இருந்ததால் நேற்று பெய்த கன மழைக்கு பேருந்து மேற்கூரைவழியாக மழை நீர் அருவி போல் கொட்டியதால்  பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

மேலும் பேருந்தில் பயணித்த பயணிகள் மழையில் நனைந்தபடி அங்கும் இங்கும் அலைந்தது காண்போரை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாக்கியது.

மேலும் படிக்க 'விக்ரம்' திரைப்பட வெற்றியில் அனைவருக்கும் பங்கு உண்டு- கமல்...

தமிழக அரசும் போக்குவரத்து நிறுவனமும் புதிய பேருந்துகள் வாங்குவதில் செலுத்தும் கவனத்தை பழைய பேருந்துகளை பராமரிப்பதிலும் ஓட்டை உடைசல் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இது போன்ற வழித்தடங்களில் பயணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்

மேலும் படிக்க | சிவனை பக்தி பரவசமாக வழிப்படும் நாய்... சேலத்தில் நடந்த விநோதம்...

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே போல் மதுரையிலிருந்து வடகாடுப்பட்டி செல்லும் பேருந்தில் இதே போல் மேற்கூரை உடைந்து மழை நீர் கொட்டியதில்  பள்ளி மாணவர்கள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி சென்றது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க | மீண்டும் பள்ளிக்கு போகலாம்... நம்மை நாம் அங்கே தேடலாம்...

சோழவந்தான் அரசு பணிமனையில் உள்ள பேருந்துகளில் பாதிக்கும் மேற்பட்ட பேருந்துகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் உடனடியாக பராமரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அல்லது புதிய பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் பயணிகளும் அரசுக்கும் போக்குவரத்து நிறுவனத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்

--- பூஜா ராமகிருஷ்ணன்