கொள்ளிடம் ஆற்றில் இருந்து சாமி சிலைகள் கண்டெடுப்பு...!!

கொள்ளிடம் ஆற்றில் இருந்து சாமி சிலைகள் கண்டெடுப்பு...!!

அரியலூர் மாவட்டம் பெரியமறை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து 2 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டம் சுள்ளங்குடி ஊராட்சிக்குட்பட்டது பெரியமறை கிராமம். இக்கிராமம் கொள்ளிடம் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் அக்ரஹார படித்துறை அருகில் இருந்த பள்ளத்தில் அப்பகுதி இளைஞர்கள் சிலர் இன்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது காலில் கல் போன்ற பொருள் தென்பட்டுள்ளது. அப்படி தென்பட்ட பொருளை தேடிப் பார்த்தபோது அது சாமி சிலை என தெரிய வந்தது.

 

இதனையடுத்து அவ்விடத்தை தோண்டிப்பார்த்த மக்கள் 200 கிலோ எடையுள்ள இரண்டு சாமி சிலைகளை கண்டெடுத்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட அந்த சிலைகள் தஷ்ணாமூர்த்தி, அம்மன் சிலைகள் என தெரிய வந்துள்ளது.  எனவே அப்பகுதி மக்கள் இது குறித்து வருவாய் துறைக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் வருவாய் துறையினர் வந்து சோதனை செய்த பிறகே இந்த சிலைகள் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.