கமுதியில் காவலர் பயிற்சி நிறைவு! 

பயிற்சி காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள், சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

கமுதியில் காவலர் பயிற்சி நிறைவு! 

கமுதி தனி ஆயுதப் படை வளாகத்தில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா  நடைபெற்றது. 

காவலர் பயிற்சிப் நிறைவு விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள தற்காலிக காவலர்கள் பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு காவல்துறை தேர்வில் தேர்ச்சி பெற்ற 258 பேருக்கு ஆறு மாத பயிற்சி முடிந்து நிறைவு அணிவகுப்பு விழா ராமநாதபுரம் சரகம் டி.ஐ.ஜி.,  மயில்வாகனன் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தங்கதுரை முன்னிலையில் நடைபெற்றது. 

விழாவில் பயிற்சி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ராமநாதபுரம் டி.ஐ.ஜி. ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சி காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள், சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இப் பயிற்சி முடித்த 258 காவலர்களும் நவம்பர் 13  வரை காவல் நிலைய பயிற்சியில் ஈடுபட்டு, அதன் பின்னர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணியாற்ற உள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு காவலர் இருந்தால் போதும்

சமூகத்தில் மக்களை பாதுகாப்பது, வளர்ச்சி பணிகளில் ஈடுபடுவது காவல் துறையின் முக்கிய பங்கு. இருபத்தி நான்கு மணி நேரமும் பணி செய்யக்கூடிய துறை காவல் துறை. பொதுமக்கள் மத்தியில் நேரடியாக சென்று சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறை காவல் துறை மட்டுமே. ஒரு பகுதியில் ஒரு காவலர் நின்றால் அந்த சுற்றுப்புறமே பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். 

காவலர்களுக்கு பாராட்டு

அரசின் அனைத்து சலுகைகளும் காவலர்களுக்கு நேரடியாக வந்து சேர்கிறது எனவே பயிற்சி முடித்த காவலர்கள் ஜனநாயக முறைப்படி பொது மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என்று ராமநாதபுரம் சக டி.ஐ.ஜி.,  மயில்வாகனன் பேசி பயிற்சி காவலர்களை பாராட்டினார். 

நிகழ்ச்சியில் கமுதி டி.எஸ்.பி., மணிகண்டன், முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னகண்ணு உட்பட ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் கமுதி ஆயுதப்படை காவலர் பயிற்சி பள்ளி அதிகாரிகள்,  பயிற்சி காவலர்களின் குடும்ப உறுப்பினர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.