நியாய விலைக் கடை அமைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!

நியாய விலைக் கடை அமைக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்!

வந்தவாசி அருகே நியாய விலை கடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெலகாம்பூண்டி கிராமத்தில் நியாய விலை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வந்தவாசி அடுத்த பெலகாம்பூண்டி  கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிபில் உள்ள கிராம மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேசூருக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் நாள்தோறும் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

 பெலகாம்பூண்டி கிராமத்திற்கு தனி நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்று பலமுறை வட்ட வழங்கல் அலுவலருக்கு மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தெள்ளார் - தேசூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 தகவல் அறிந்த தேசூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியலில் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.