வாத்தியாருக்கு வடை வாங்கி சென்ற மாணவர்கள்...

சின்னாளபட்டியில் வகுப்பு ஆசிரியருக்கு டீக்கடையில் வடை வாங்கி பள்ளி மாணவர்கள் சென்றது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

வாத்தியாருக்கு வடை வாங்கி சென்ற மாணவர்கள்...

திண்டுக்கல் | சின்னாளப்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் உழவர் சந்தை அருகில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளிக்கு, சின்னாளபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் இங்கு படிக்க வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் பள்ளிக்கு அருகில் உள்ள டீ கடையில் ஆசிரியருக்கு வடை வாங்கி சென்றனர்.

மேலும் படிக்க | பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய சகோதரன்...

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது அடிக்கடி இந்த பள்ளியில் இருந்து  ஆசிரியர்களுக்கு வடை, டீ வாங்க மாணவர்கள் வருவது வழக்கம் என கூறினர்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களை பிற பணிகளுக்காக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தும் பள்ளி சிறார்களை டீக்கடைக்கு அனுப்பி வடை வாங்கி வரச் செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் எப்போ தெரியுமா?வெளியானது அறிவிப்பு!