மாணவர்கள் படிப்பு மட்டுமல்லாமல் மன நலன்‌ - உடல் நலன் காப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

மாணவர்கள்  படிப்பு மட்டுமல்லாமல் மன நலன்‌ - உடல் நலன் காப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

சென்னையில் கலைத்திருவிழா

சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை‌ மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி  இன்று தொடங்கி வைத்தார்.

அதன்படி  நடனம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், நுண்கலை வேலைப்பாடு, நாடகம் உள்ளிட்ட 24 வகைகளில் 208 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

5000 பேர் பங்கேற்பு

இன்று தொடங்கிய போட்டி நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் 5000 மாணவ மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர். இதில் வெற்றி பெறும் முதல் மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.

மாவட்ட ஆட்சியர் பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி, இன்றைய மாணவ மாணவிகளே நாட்டின் வருங்கால சொத்து என்றும் மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும்  திறமையை கண்டறிய வேண்டும். அதன் மூலம் அதில் முதன்மையான நபராக வரலாம் என்றார். 

மன நலன்‌ - உடல் நலன்

மாணவ மாணவிகள் படிப்பு மட்டுமல்லாமல் மன நலன்‌ மற்றும் உடல் நலன் காப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இந்த காலகட்டத்தில் மாணவர்களை திசை திருப்பும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதிலிருந்து மாணவர்கள் தங்களை காத்து படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க: என் மீது நம்பிக்கை வைக்கும் மக்கள்..! மண் போலவே மனம்..! தென்காசியில் நெகிழ்ந்து பேசிய முதலமைச்சர்..!

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் சினேகா,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குனர் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.