வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!!! அலுவலகத்தில் பெரும் பரபரப்பு!

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்தில் ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!!! அலுவலகத்தில் பெரும் பரபரப்பு!

கடலூர்: விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் பொதுநிதி, 1 கோடியே, 96 லட்ச்சத்தில், 1 கோடி மட்டுமே 20 ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்து மீதமுமுள்ள 96 லட்சம் அலுவலக பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கவுன்சிலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையை ஏற்காத கவுன்சிலர்கள் தங்கள் ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை தேவைக்கான எந்த பணியும் நடைபெறாமல் மக்கள் எங்களை கேள்வி கேட்கும் நிலையில் பொதுநிதியில் பாதி மட்டும் ஒதுக்குவதை ஏற்றுக் கொள்ளமுடியாது எனக்கூறி அந்த சுற்றறிக்கையை கிழித்து எறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | இனி நாங்கள் ஜீரோ இல்லை ஹீரோ...ஜெயக்குமாருக்கு தக்க பதிலடி தந்த வைத்திலிங்கம்!

பின், சாலைமறியல் செய்யப்போவதாக கவுன்சிலர்கள் கூறி நீண்ட நேர வாக்குவாதத்திற்க்கு பின்பு 20 ஊராட்சிக்கும் ரூ1கோடி, 80 லட்சம்நிதியும், அலுவலக பணிக்கு ரூ 16 லட்சம் ஒதுக்குவதாக வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறியதன் பேரில் அந்த தீர்மானத்தை அனைத்து கவுன்சிலர்களும் கையொப்பமிட்டு நிறைவேற்றினர்.

சாலைமறியல் செய்யப்போவதாக கூறி நீண்ட விவாதத்தில் கவுன்சிலர்கள் ஈடுபட்டதால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | 68வது தேசிய விருதுகள் வழங்கும் விழா:ஆதிக்கம் செலுத்திய கோலிவுட்!