கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்ட பெண்கள்...அதிகாரிகள் நடவடிக்கை!

கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்ட பெண்கள்...அதிகாரிகள் நடவடிக்கை!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள  சார்வாய் கிராமத்தில் தனியார் நூல் மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நூல் மில்லில் உள்ளூர் பணியாளர்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் தின கூலி அடிப்படையில் ஆட்களை அழைத்து வந்து பணியில் வைத்து வேலை செய்து வருகிறார்கள். 

வெளிமாநிலப் பெண்கள் கொத்தடிமைகளாக

இந்நிலையில் இந்த மில்லில் ஒரிசா , ஜார்ஜ்கனட்,சட்டிஷ்கர் மாநிலத்தை சேர்ந்த 35பெண்கள் இங்குள்ள விடுதியில் தங்கி கடந்த சில மாத காலமாக தினக்கூலியாக நூல் மில்லில்  பணியாற்றி வருகின்றனர். இவர்களை கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு சரியான சம்பளம் வழங்கவில்லை என்று பெண்கள் பாதுகாப்பு உதவி மையத்திற்கு எண் 181க்கு  போன் தகவல் சென்றுள்ளது.

நிர்வாகத்தின் மீது புகார்

அதன் பேரில் தலைவாசல் வட்டாட்சியர்  மற்றும் வருவாய்த் துறையினரும் போலீசாரும் சம்பந்தப்பட்ட  நூல் மில்லுக்குச் சென்று விசாரணை செய்தனர். இந்த விசாரணையின் போது தங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் தினசரி 400 ரூபாயும் ,வாரத்தில் ஒரு நாள் விடுமுறை தருவதாக கூறி அழைத்து வந்ததாகவும் ஆனால் இங்கு அதுபோல் நிர்வாகம் தங்களுக்கு செய்து தரவில்லை என புகார் கூறினர்.

அதைத் தொடர்ந்து நூல் மில்லில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 35 பெண்களையும் வருவாய்த் துறையினர் மீட்டு சேலத்தில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இது குறித்து தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். நேற்று இரவு 7 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒவ்வொரு பெண்களிடம் ஆத்தூர் கோட்டாட்சியர் விசாரணை செய்தார். 

சொந்த மாநிலத்திற்கு அனுப்பினார்கள்

மேலும் அவர்கள் அனைவரும் சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல தனியார் வேன் மூலம் சேலம் ஜங்ஷன் ரயிலுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வெளி மாநிலத்தில் இருந்து வேலை செய்யும் பெண்கள்ளை கொத்தடிமைகளாக வேலை செய்யக்கூடாது என்றும் அவர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.