தமிழ்நாட்டில் மருத்துவ கல்லுாரிகளில் சுமார் 8,000 எம்.பி.பி.எஸ் இடங்கள்.. அக்.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

பொது பிரிவினர் ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் நடைபெறும் என அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் மருத்துவ கல்லுாரிகளில் சுமார் 8,000 எம்.பி.பி.எஸ் இடங்கள்.. அக்.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

8,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள்:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சுமார் 8,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள 2,000 மேற்பட்ட இடங்கள் உள்ளன. 

3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்:

இந்த இடங்களுக்கு, 2022 - 23ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இன்று முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnhealth.tn.gov.in, உள்ளிட்ட இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம். 

கலந்தாய்வு:

அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு பிரிவு, 7.5 சதவீத ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு நேரடியாகவும், பொது பிரிவினருக்கு ஆன்லைனிலும், 'கலந்தாய்வு' நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.