இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு :  நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!

இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் இன்று மதியத்திற்கு பிறகு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு :  நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!

நாடு முழுவதும் உள்ள 612 மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 91 ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு நீட் தேர்வானது கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது.  இதனை சுமார் 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இதற்கென நாடு முழுவதும் 3 ஆயிரத்து 570 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

இந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் இன்று மதியத்திற்கு பிறகு வெளியாக உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை முகமையின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கமான neet.nta.nic.in என்ற இணைய பக்கத்தில் மாணவர்கள் பார்த்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி நீட் தேர்வுக்கான விடைத்தாள் வெளியான நிலையில், அது சரிபார்க்கப்பட்டு இன்று தேர்வு முடிவுகளுக்கு முன்னதாகவே இறுதி விடைத்தாள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை நீட் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் இறுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு ஒரே மதிப்பெண் பெறுவோருக்கு உயிரியல் மதிப்பெண் அடிப்படையிலும்,  அதைத்தொடர்ந்து வேதியல் மதிப்பெண் அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.