மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்றுடன் நிறைவு..!

நீட் தேர்வில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு..!

மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்றுடன் நிறைவு..!

நீட் தேர்வு:

நடப்பு ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றனர். 

ஆன்லைனில் விண்ணப்பம்:

இதனையடுத்து, பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் கடந்த 3ம் தேதி வரை tnhealth.tn.gov.in மற்றும் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்திருந்தது.

காலக்கெடு இன்றுடன் நிறைவு:

அதன் அடிப்படையில், கடந்த 22 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை இன்று வரை நீட்டித்திருந்தது. அதன்படி, மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. 

10,425 இடங்கள்:

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள், மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள இடங்கள் என மொத்தமுள்ள 10 ஆயிரத்து 425 மருத்துவ இடங்களை பூர்த்தி செய்வதற்காக மாணவர்களிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.