முதுகலை பட்டப்படிப்பு : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எத்தனை இடங்கள்? எத்தனை கல்லூரிகள்..!

16-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் - உயர்கல்வித்துறை..!

முதுகலை பட்டப்படிப்பு : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எத்தனை இடங்கள்? எத்தனை கல்லூரிகள்..!

இளங்கலை பட்டப்படிப்பு:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நிறைவு பெற்று, மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கல்லூரிகளில் உள்ள இடங்களை காட்டிலும், மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து இருந்ததால், கூடுதலாக இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த அதிக இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 

முதுகலை படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்:

இந்த நிலையில், முதுகலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பட்டப்படிப்புகளில் காலியாக இருக்கும் 24,341 இடங்களுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது. 

www.tngasapg.in :

வரும் 16-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் எனவும், விண்ணப்பதிவு செய்பவர்களில் தகுதியானவர்களுக்கான தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகள் மூலம் வரும் 20-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான செயல்பாடுகள் வரும் 21-ம் தேதி முதல் தொடங்கும் எனவும், விண்ணப்ப பதிவு உட்பட மேலும் விவரங்களுக்கு www.tngasapg.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.